ஆன்லைன் பரிவர்த்தனையின் போது தரவுகள் திருடப்படுகிறது என்கிற பயமா, இந்திய ரிசர்வ் வங்கி 7ம் தேதி வெளியிடப்பட்ட‌ அறிக்கையே பாருங்கள்.


ஜனவரி 1, 2022 முதல், கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை மாறவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவு சேமிப்பு தொடர்பான டோக்கனைசேஷனுக்கான விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதில், கார்ட் வைத்திருப்பவரின் தரவின் தனியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியானது, 7ம் தேதி வெளியிடப்பட்ட‌ அறிக்கையில், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனையின் கீழ், ஜனவரி 1,2022 தேதிக்கு பிறகு வங்கியின் பரிவர்த்தனையின் கார்டுகான‌ டோக்கனைசேஷனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டது.இதனால் ஒரே கிளிக்கில் செய்யப்படும் பரிவர்த்தனை குறைக்கப் படும்.அதே போன்று கார்டின் அனைத்து‌ தகவல்களையும் உள்ளிட தேவையில்லை.

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் டோக்கனைசேஷன் பயன்படுத்துவதால் கார்டின்‌ தகவல்களை உள்ளிடுவதற்கு  பதிலாக சீரற்ற இலக்கங்கள் பயன்படுத்தப்படுகிறது.இதனால் வங்கிகள் மற்றும் கார்டு வழங்குபவர்களை (ரூபே, விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் சில) தவிர மற்ற வணிகர்கள் மற்றும் பரிவர்த்தனை தளங்களில் தரவுகள் சேமிப்பது தடுக்கப்படுக்கப்படுவதால் தரவுகள் கசிவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

டோக்கன் சேவை வழங்குநர் வழங்கும் கார்டுகளுக்கு மட்டுமே டோக்கனைசேஷன் வசதி வழங்கப்படும். கார்ட் தரவை டோக்கனைஸ் மற்றும் டி-டோக்கனைஸ் செய்யும் வசதி அதே டோக்கன் சேவை வழங்குநரிடம் இருக்கும். வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் கார்ட் தரவின் டோக்கனைசேஷன் செய்யப்படும்.


கார்டின் தகவல்களை ‌சேமித்து வைப்பதற்கு COF என்று பெயர்.வங்கிகள் மற்றும் கார்டின்‌ வலைதளங்களுக்கு இடையிலான டோக்கனைசேஷனை TSP வழங்குகிறது. இவைகள் இணைந்து செயல்படும்‌ COFT சேவையே இந்தியன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த சர்விஸ் வாடிக்கையாளர்கள் கையால்வதற்கு ஏற்ற வகையிலும் ‌மிகுந்த பாதுகாப்புடனும் இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது உறையில் கூறப்பட்டாவது,"தகவல்களை மிகுந்த பாதுகாப்புடன் எளிதாக கையாளும் வண்ணமும் உள்ளது.இதில் எந்த விதமான ‌உண்மை தகவல்களும் உள்ளிட தேவையில்லை என்பதால் தரவுகள் திருடப்படமாட்டது.அதனால், எந்த சமுக வலைத்தளங்கலோ அல்லது ஊடகமோ விவாதம் பண்ண முடியாது".

இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில், "வாடிக்கையாளர் ‌சம்மதத்துடன் மற்றும் உறுதி படுத்தும் வகையில் கூடுதல் காரணிகள் இணைக்கப்பட்டுள்ளன.இவை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மாறுபவையாக உள்ளது".

மத்திய வங்கி தனது அறிவிப்பில், "வங்கிகள் மற்றும் கார்டு வழங்குபவர்களை தவிர மற்ற எவராலும் தரவுகளை தக்க வைக்க முடியாது. ஏற்கனவே பதிவு‌ செய்யப்பட்ட தகவல்கள் நீக்கப்படும்".

இந்திய ரிசர்வ் வங்கி டோக்கனைசேஷனை விரிவு படுத்தும் வகையில், அனைத்து விதமான ஆன்லைன் பயன்படுத்தும் சாதனங்களில் ( கைப்பேசி, மடிக்கணினி, கடிகாரம் மற்றும் சில)பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய பரிவர்த்தனையினால் தரவுகளை சேகரித்து வைத்து கொள்ள கூடியவர்களுக்கு மிகுந்த இழப்பாக அமையும்.மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்பாட்டிற்கும் இந்திய ரிசர்வ் வங்கி பொருப்பு ஏற்றுள்ளது.

இருப்பினும், பரிவர்த்தனை கண்காணிப்பு அல்லது நல்லிணக்க நோக்கங்களுக்காக, நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட தரவை சேமிக்கலாம். கார்ட் எண் மற்றும் கார்ட் வழங்குபவரின் பெயரின் கடைசி நான்கு இலக்கங்கள் வரை சேமித்து வைக்க அனுமதிக்கப்படும்.

வணிக மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய பயன்படும் செயலிகள் இந்த கடுமையான செயல்பாட்டை எதிர்த்து வாதாடினார்.அவர்கள் கோரிக்கையாக உயர்ந்த தரத்தில் ஒன்றான PCI DSS Level-1 சான்றிதழ் வைத்திருக்கும் வணிகர்களையாவது தரவுகளை சேமித்து வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

Comments

Popular posts from this blog

இன்று உலக சுற்றுலா தினம். வாங்க உலக சுற்றுலா தலங்களை பார்ப்போம்.World Tourism Day.

இன்று உலக இதய தினம். World Heart Day.