இன்று உலக இதய தினம். World Heart Day.

 இதயத்திற்கு ஏதடா ஈவிரக்கம்! இருந்திருந்தால் தான் நிறுத்திருக்குமே ஓட்டத்தை.

என்பது போல உடலில் இதயம் மகத்தான பங்காற்றுகிறது. இவ்வாறு செயல்படும் இதயத்திற்கான நாள் தான் இன்று. 

இரக்கம் இல்லாதவனை, இதயம் இல்லாதவன் என்கிறோம். அன்புக்குரியவர்களின் பாசத்தை, பசுமையான நினைவுகளை இதயத்தில் நிலை நிறுத்தி வைக்கிறோம். காதல் எனும் மகத்தான விஷயத்தை நாம் இதயத்தை கொண்டு தான் வளர்கிறோம். அப்படிப்பட்ட இதயத்திற்கென்று ஒரு தினம் கொண்டாடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தான் காணப்படுகிறது.

வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். 

புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.

  • இதய நோய் தவிர்க்க: 

1. மது, புகை பழக்கத்தை விட்டு சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மனதை குழப்பி கொள்ளாமல் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

2. சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

3. வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மிதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.

4. சரியானநேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.

5. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.

6. ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது

7. எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.

8.நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது. 

உணவில் தவிர்க்க வேண்டிய விசயங்கள்  

  • 1.மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் இருப்பதால் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.

  • 2.முறையற்ற உணவுகள் எடுத்துக்கொள்ள கூடாது. 

  • 3.எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  • 4.அதிகம் ஆல்கஹாலை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  • 5.அதிகம் உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • 6.முட்டை, பால், இறைச்சி, சமையல் எண்ணெய், நெய் போன்ற நம் உணவுகளை தவிர்க்க வேண்டும்.  



Comments

Popular posts from this blog

இன்று உலக சுற்றுலா தினம். வாங்க உலக சுற்றுலா தலங்களை பார்ப்போம்.World Tourism Day.