இன்டர்நெட் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யனுமா இந்த தகவல் உங்களுக்கு தான். (Transection Without Internet ).


   தற்போது ஆன்லைன் பரிவர்த்தனையானது வேகமாக வளர்ந்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் பரிவர்த்தனைகான செயலியும்(Google pay, Paytm, Phonepay) அதிகரித்து வருகிறது. 
அந்த செயலிகளில் பணம் அனுப்பும் போது இன்டர்நெட் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பரிவர்த்தனையின்‌ போது சில நேரங்களில் நமது இன்டர்நெட் சேவையானது ஏதாவது காரணங்களால் துண்டிக்கப்படலாம்.
     அப்படிப்பட்ட நேரங்களில் நாம் பணம் அனுப்பும் போது மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இது போன்ற சமயங்களிலும் மற்றும் சுமார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஏற்ற வகையில்‌ இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம்  (NPCI)ஆனது *99# என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
      நாம் இன்டர்நெட் இருக்கும் போது, இந்திய அரசு அறிமுகப்படுத்திய BHIM செயலியை தரவிறக்கம் செய்து மற்றும் அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பிறகு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனையே செய்யலாம்.

1.உங்கள் ஃபோனில் *99# என்று டைப் பண்ண வேண்டும். பிறகு கீழ்க்கண்டவாறு தோன்றும்.



2. அதில் பணம் அனுப்புதல், பணம் கோருதல், மீதி இருக்கும் பணம்  போன்று ஏழு பரிவர்த்தனைகளில் நமக்கு தேவையான ஒன்றை உள்ளிடவும்.பிறகு கீழ்க்கண்டவாறு தோன்றும்.

3. இதில் நாம் அனுப்பும் நபரின் Google pay, Paytm போன்ற பரிவர்த்தனை செயலியில் பயன்படுத்தப்பட்ட போன் எண்ணை உள்ளிடவும். அல்லது UPI ID அல்லது அவர்களின் Account Number மற்றும் IFSC உள்ளிடவும்.
4. பிறகு, நீங்கள் அனுப்பும் தொகையை உள்ளிடவும்.
5. நீங்கள் உள்ளீடு செய்த பின்னர் உங்களது Google pay போன்ற செயலியின் UPI PIN கேட்கப்படும். அதை உள்ளிடவும்.
6. உங்களது Account Balance பார்க்கும்போது ‌‌‌கீழ்க்கண்டவாறு தோன்றும்.

6. நீங்கள் பணம் பரிவர்த்தனை செய்த பிறகு உங்களது தொலைபேசி எண்ணுக்கு பரிவர்த்தனை மு‌டிந்து விட்டதற்கான (Transection completed) தகவல் ‌‌‌வந்துவிடும்.
7. இந்த பரிவர்த்‌தனையின் போது உங்கள் Google pay, Paytm போன்ற செயலியில் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணில் மட்டுமே செய்ய வேண்டும்.

இது என்னுடைய முதல் பதிவாகும்.தங்களது கருத்துக்களை comment தெரிவிக்கவும்.


Comments

Popular posts from this blog

இன்று உலக சுற்றுலா தினம். வாங்க உலக சுற்றுலா தலங்களை பார்ப்போம்.World Tourism Day.

இன்று உலக இதய தினம். World Heart Day.